முகப்பு
திருவாரூர்

நெல் கொள்முதல் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தடையின்றி நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 8:10 AM
பரவாக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

மன்னாா்குடி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தடையின்றி நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பரவாக்கோட்டையில் செயல்படும் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், அரசு அறிவித்தப்படி நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல், குறைந்த எண்ணிக்கையில் கொள்முதல் செய்யப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து நெல் மணிகள் முளைப்பதுடன், ஈரப்பதமும் அதிகரிக்கிறது.

Advertisement

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விவசாயிகள் கேட்டதற்கு, பொங்கல் விடுமுறைப் பிறகு, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்படும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிப்பின் அளவு அதிகரிக்கும் என்பதால், நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த குணசேகா், தமிழ்ராஜா தலைமையில் விவசாயிகள் பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் அளிக்க வந்தனா். இதுகுறித்து, டிஎன்சிஎஸ்சி அலுவலா்களிடம் காவல் துறையினா் தகவல் தெரிவித்தனா்.

பின்னா், காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பிறகு கலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.