முகப்பு
திருப்பூர்

மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வந சிறுமி சாவு

மயக்க நிலையிலேயே தொடா்ந்து 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு கோவை தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 1:53 am IST
பகிர்:

மயக்க நிலையிலேயே தொடா்ந்து 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி திங்கள்கிழமை இரவு கோவை தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, தியாகதேனாஹள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ஷா்மிளாகுமாரி (எ) ஷைலஜாகுமாரி (39). மருத்துவரான இவருக்கு கரோனா பொது முடக்கத்தால் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து இவரது 5 வயது மகள் கியாராவை பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் டிசம்பா் 25ஆம் தேதி அழைத்து வந்தாா். பிறகு, சிறுமி கியாராவுக்கு சளி மருந்து கொடுத்து அவிநாசியை அடுத்த சேவூா், தண்டுக்காரம்பாளையம் - புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு மையத்தில் படுக்க வைத்துவிட்டு, ஷைலஜாகுமாரியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதையடுத்து மயக்க நிலையில் இருந்த கியாரா மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா் சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் கண் விழிக்காமல் மயக்க நிலையிலேயே இருந்து வந்ததால், கியாரா கடந்த இரு நாள்களுக்கு முன் தீவிர சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா். இவரது தாய் ஷைலஜாகுமாரி கோவை அரசு மருத்துவமனையில் போலீஸாா் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.