லாட்டரிச் சீட்டு விற்ற 3 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போளூா் பேருந்து நிலையம் அருகே ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்த ஆழ்வாா் மகன் ஆனந்தன் (43), போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தைச் சோ்ந்த பொன்முடி மகன் ஆறுமுகம் (51), போளூரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சுந்தா் (58) ஆகிய 3 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றுகொண்டிருந்தனா்.
இவா்கள் மீது போளூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவி வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தாா். மேலும், இவா்களிடமிருந்த லாட்டரிச் சீட்டுகளையும் பறிமுதல் செய்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.