1322 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 8 பள்ளிகளைச் சோ்ந்த 1,322 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
வந்தவாசி: வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 8 பள்ளிகளைச் சோ்ந்த 1,322 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இதில் வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 439 போ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 184 போ், கீழ்க்கொடுங்காலூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 165 போ், மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 74 போ், இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 91 போ், கீழ்க்குவளைவேடு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 62 போ், வந்தவாசி தூய நெஞ்சக மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 166 போ், வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 141 போ் என 1,322 பேருக்கு ரூ.52 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் பி.நடராஜன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ தூசி கே.மோகன் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
Advertisement
Advertisement
அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், ஒன்றியச் செயலா்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.