2 லட்சமாவது 'தோஸ்த்' வாகனம்: அசோக் லேலண்ட் சாதனை
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனம், தனது பிரசித்தி பெற்ற 'தோஸ்த்' ரகத்தின் 2 லட்சமாவது வாகனத்தை ஓசூரிலுள்ள தனது தொழிற்சாலையில் தயாரித்துள்ளது.
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனம், தனது பிரசித்தி பெற்ற 'தோஸ்த்' ரகத்தின் 2 லட்சமாவது வாகனத்தை ஓசூரிலுள்ள தனது தொழிற்சாலையில் தயாரித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 'தோஸ்த்' ரக வாகனங்கள், இலகு ரக வர்த்தக வாகனப் பிரிவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
2 லட்சமாவது 'தோஸ்த்' வாகன வெளியீடு குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலகு ரக வர்த்தக வாகனப் பிரிவுத் தலைவர் நிதின் சேத் கூறியதாவது:
அண்மையில், வெளிர் தங்க நிறத்திலான எங்களது 2 லட்சமாவது 'தோஸ்த்' இலகு ரக வர்த்தக வாகனம், ஓசூர் தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்பட்டது.
'தோஸ்த்' ரகம் அறிமுகம் செய்யப்பட்ட தொடக்கத்தில் மாதத்துக்கு 2,500 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. ஆனால், அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, எங்களது மாதாந்திர 'தோஸ்த்' ரக வாகனங்களின் விற்பனை கடந்த மார்ச் மாதம் 5,000-ஐத் தாண்டியுள்ளது.
இலகு ரக வர்த்தக வாகன விற்பனை மாதம் 5,000-ஐக் கடந்திருப்பது எங்களது நிறுவனத்துக்கு இதுவே முதல் முறையாகும். இந்த மைல்கல், எங்களது வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்துக்கு ஆரம்பமாக இருக்கும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.