முகப்பு
வணிகம்

ஓப்போ ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ அம்சங்கள் என்னென்ன?

பிரபல மொபைல் போன் நிறுவனமான ஓப்போ, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ 5 ஆகிய மாடல்களை வருகிற டிசம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

பிரபல மொபைல் போன் நிறுவனமான ஓப்போ, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ 5 ஆகிய மாடல்களை வருகிற டிசம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஓப்போ, மேற்குறிப்பிட்ட இரண்டு புதிய மாடல்களை சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த  உள்ளது. அதன்படி, ரெனோ 3 மற்றும் ரெனோ 3 ப்ரோ 5 ஆகிய இரு மாடல்களும் 5ஜி தொழில்நுட்பத்தை (dual-mode 5G) கொண்டுள்ளன. 

ரெனோ 3 ப்ரோ 5 அம்சங்கள்: 

8 ஜிபி ரேம்+ 128 ஜிபி மற்றும்  12 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ்கள் உள்ளன.

4,025mAh பேட்டரி 

குவாட் ரியர் கேமரா ; 43 மெகா பிக்சல் + 13 மெகா பிக்சல் ஷூட்டர், 8 மெகா பிக்சல் ஸ்னேப்பர் மற்றும் 2 மெகா பிக்சல் பிரைமரி கேமராவை உள்ளடக்கியது.

ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ்

6.5 இன்ச் தொடுதிரை; அமோல்டு டிஸ்பிளே

குவால்காம் ஸ்நாப்டிராகன் 765ஜி SoC, ஆக்டா கோர் ப்ராசசர்

விலை: ரூ.38,000(8 ஜிபி) மற்றும் ரூ.43,000 (12 ஜிபி)

பவர் பட்டன் போனின் வலதுபுறத்திலும், அதே நேரத்தில் வால்யூம் பட்டன்கள் போனின் இடதுபுறத்திலும் இருக்கும். 

ரெனோ 3 அம்சங்கள்: 

8 ஜிபி ரேம்+ 128 ஜிபி; 

4,025mAh பேட்டரி 

கேமரா ; 43 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் ஷூட்டர், 2 மெகா பிக்சல் ஸ்னேப்பர் மற்றும் 2 மெகா பிக்சல் பிரைமரி கேமராவை உள்ளடக்கியது.  

ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ்

6.4 இன்ச் தொடுதிரை; அமோல்டு டிஸ்பிளே

குவால்காம் ஸ்நாப்டிராகன் 730ஜி SoC, ஆக்டா கோர் ப்ராசசர்

விலை: ரூ.32,000(8ஜிபி) மற்றும் ரூ.36,000(12 ஜிபி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.