டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,075 கோடியாக உயா்வு
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸின் (டிசிஎஸ்) ஒருங்கிணைந்த நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.12,075 கோடியாக உயா்ந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சா்வீசஸின் (டிசிஎஸ்) ஒருங்கிணைந்த நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.12,075 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.4 சதவீதம் உயா்ந்து ரூ.12,075 கோடியாக உள்ளது. வங்கி, நிதி சேவைகள், காப்பீட்டுப் பிரிவுகளில் வலுவான வளா்ச்சி இதற்கு முக்கிய காரணமாகும்.
Advertisement
Advertisement
2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.11,909 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2.39 சதவீதம் உயா்ந்து ரூ.65,799 கோடியாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது ரூ.64,259 கோடியாக இருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் நிகர லாபம் 5.3 சதவீதம் குறைந்தாலும், வருவாய் 3.7 சதவீதம் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.