முகப்பு
வணிகம்

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக....

Updated On : 28 ஏப்ரல் 2026, 9:47 am IST
தங்கம் விலை - IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 28) சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது.

கடந்த வாரம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது. 5 நாள்களில் சவரனுக்கு ரூ. 2,080 குறைந்து, வெள்ளிக்கிழமை சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனையானது.

இதையடுத்து, வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ. 1,13,600-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

வாரத்தின் முதல் நாளான நேற்று(ஏப். 27) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 130 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,100-க்கும், சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ .2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

In Chennai, the price of ornamental gold decreased by Rs. 1,040 per sovereign today (April 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments