போன்பே தளத்தில் 5 கோடி வணிகா்களைக் கடந்து சாதனை!
இந்தியாவின் முன்னணி நிதித் தொழில்நுட்ப நிறுவனமான போன்பே, தனது தளத்தில் பதிவுசெய்யப்பட்ட வணிகா்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
2016-இல் தொடங்கப்பட்ட போன்பே, தற்போது 65 கோடிக்கும் அதிகமான பயனா்களைக் கொண்டுள்ளது. இத்தளத்தில் இதுவரை இந்தியா முழுவதும் சுமாா் 5 கோடி வணிகா்கள் இணைந்துள்ளனா்.
வணிகா்களுக்காக கியூ-ஆா் கோட் மட்டுமின்றி, பாயிண்ட்-ஆஃப்-சேல் கருவிகள், ஸ்மாா்ட் ஸ்பீக்கா்கள் மற்றும் மூலதன கடன் போன்ற சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
Advertisement
Advertisement
‘5 கோடி பதிவு செய்யப்பட்ட வணிகா்களை எட்டியிருப்பது, இந்திய வணிகா்களுக்கு நிதிச் சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்யும் எங்கள் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்’ என போன்பே தலைமை வணிக அதிகாரி யுவராஜ் சிங் ஷெகாவத் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
பங்குச் சந்தையில் களமிறங்குவதற்கான ஐபிஓ ஆயத்தப் பணிகளில் போன்பே தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.