என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!
நியூ தில்லி டெலிவிஷன் லிமிடெட், 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ. 98.57 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
புதுதில்லி: தனியார் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான, நியூ தில்லி டெலிவிஷன் லிமிடெட், 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ. 98.57 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
2024-25 நிதியாண்டின் 4வது காலாண்டில், இந்நிறுவனம் ரூ. 61.97 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்தது. அதே வேளையில், 2026 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 16.45 சதவீதம் உயர்ந்து ரூ. 147.96 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ. 127.05 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
2026 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் 29.4 சதவீதம் அதிகரித்து ரூ. 247.65 கோடியாக இருந்தது. இதற்கிடையில், 2025-26 நிதியாண்டில், என்டிடிவி-யின் இழப்பு விரிவடைந்து ரூ. 323.16 கோடியாக அதிகரித்தது.
Advertisement
Advertisement
மார்ச் 31, 2026 உடன் முடிவடைந்த முழு நிதியாண்டிற்கான மொத்த ஒருங்கிணைந்த வருவாய், 14.4 சதவீதம் உயர்ந்து ரூ. 540.32 கோடியாக உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், நியூ தில்லி டெலிவிஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் ரூ. 81.33 ஆக நிறைவடைந்தன.
New Delhi Television Ltd reported a widening of its consolidated net loss to Rs 98.57 crore in the March quarter of FY 2025-26.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.