ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிகர லாபம் ரூ. 918 கோடியாகச் சரிவு!
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடும் சரிவைச் சந்தித்து, ரூ. 918.07 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
புதுதில்லி: அதிகரித்த செலவினங்களைக் காரணமாக, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடும் சரிவைச் சந்தித்து, ரூ. 918.07 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
இதுவே, கடந்த ஆண்டில், நிறுவனம் ரூ. 4,387.08 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய், முந்தைய ஆண்டின் 4வது காலாண்டில் பதிவான ரூ. 4,268.05 கோடியிலிருந்து, ரூ. 4,154.34 கோடியாகக் குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
2024-25 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் ரூ. 2,739.62 கோடியாக இருந்த கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தின் விலை ரூ. 3,285.68 கோடியாக அதிகரித்துள்ளது.
பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய செலவினங்கள், 2025 நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ. 4,827.97 கோடியாக இருந்த நிலையில், இக்காலாண்டில் ரூ. 5,419.87 கோடியாக அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டின் 4வது காலாண்டில் ரூ. 2,739.62 கோடியாக இருந்த, கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தின் விலை, குறிப்பிட்ட காலாண்டில் ரூ. 3,285.68 கோடியாக அதிகரித்துள்ளது.
2026 நிதியாண்டு முழுவதற்கும், நிறுவனத்தின் நிகர லாபம் 2025 நிதியாண்டில் பதிவான ரூ. 4,937.52 கோடியிலிருந்து ரூ. 2,900.23 கோடியாகக் குறைந்தது.
நிறுவனத்தின் ஆண்டு வருவாய், கடந்த நிதியாண்டில் ரூ. 23,999.29 கோடியாக இருந்த நிலையில், 2026 நிதியாண்டில் ரூ. 20,862.03 கோடியாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், விஜேஷ் பாபு தோட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதே வேளையில், ஆஷீஷ் சதுர்வேதியை நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிப்பதற்கும் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
Reliance Infrastructure has posted a sharp decline in consolidated net profit at Rs 918.07 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.