டிஎஃப்எஸ் Q4 நிகர லாபம் 15% உயர்வு!
டிராவல் ஃபுட் சர்வீசஸ் லிமிடெட், மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
மும்பை: விமான நிலைய உணவு விற்பனை நிலையம் மற்றும் ஓய்வறைகளை இயக்கும், 'டிராவல் ஃபுட் சர்வீசஸ் லிமிடெட்' (டிஎஃப்எஸ்) மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ. 122.60 கோடியை எட்டியுள்ளதாகத் தெரிவித்தது.
இதுவே, கடந்த ஆண்டு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 106.55 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில், செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் 25.67 சதவீதம் அதிகரித்து ரூ. 460.68 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 366.57 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
நிதியாண்டு 2026 ஒரு மைல்கல் ஆண்டாக அமைந்தது. பட்டியலிடப்பட்ட நிறுவனமான பிறகு, எங்களின் முதல் முழு ஆண்டாகும். வலுவான நிதிச் செயல்திறனால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் எங்கள் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 25.4 சதவீதமும் உயர்ந்து, வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ஆண்டுக்கு ஆண்டு 21.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
நிதியாண்டு 2026ல் 4வது காலாண்டில் காணப்பட்ட குறுகிய கால சவால்கள் இருந்தபோதிலும், நாங்கள் எங்கள் செயல்பாடுகளில் மீள்திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, சீரான செயல்திறனை வழங்குகிறோம் என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான வருண் கபூர்.
550 விற்பனை நிலையங்களைக் கடந்து, 20 விமான நிலையங்களுக்கு விரிவடைந்து, எங்கள் பிராண்ட் தொகுப்பை 145 பிராண்டுகளாக ஆழப்படுத்துவது, நிறுவனத்தின் செயல்பாட்டின் பரந்த தன்மையை பிரதிபலிக்கிறது.
கொச்சி மற்றும் புதுதில்லி விமான நிலையங்களில் செயல்பாடுகள் சிறப்பாக அதிகரித்து வருகின்றன. நவி மும்பையில் புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. நொய்டா விமான நிலையத்தில் வணிக ரீதியாகத் தொடங்கப்படவுள்ள எங்கள் புதிய கிளைகள் குறித்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என்றார்.
Airport food outlet and lounge operator Travel Food Services Limited (TFS) has reported a 15 per cent year-on-year growth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.