ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.82! 14 காசுகள் சரிவு!
இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து, ரூ. 94.82ஆக வர்த்தம் நிறைவுபெற்றது.
மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து, ரூ. 94.82ஆக வர்த்தம் நிறைவுபெற்றது.
பீப்பாய் ஒன்றுக்கு 115 அமெரிக்க டாலர் என்ற அளவில் உயர்ந்துகொண்டிருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மற்றும் தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு நிதி ஆகியவற்றின் அழுத்தமானது, இந்திய ரூபாயின் மதிப்பை 14 காசுகள் சரிய வைத்து, வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலைக்கு சென்று ரூ. 94.82ஆக நிலைபெற்றது.
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் இறக்குமதிச் செலவுகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் வரவிருக்கும், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கொள்கை முடிவிலிருந்து கிடைக்கும் சமிக்ஞைகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்பனை செய்திருப்பதும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.79 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூபாய், அதன் மதிப்பை இழந்து, வர்த்தக நேரத்தின் இடையே ரூ. 94.86 என்ற மிக குறைந்த நிலையை எட்டியது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 14 காசுகள் சந்தித்து ரூ. 94.82 என்ற அளவில் நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 53 காசுகள் சரிந்து ரூ. 94.68 என்ற அளவில் வர்த்தகம் நிறைவுபெற்றது.
The rupee depreciated 14 paise to close near its all-time low at 94.82 against the US dollar on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.