ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!
இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ. 95.73ஆக நிறைவடைந்தது.
மும்பை: மேற்கு ஆசியாவில் மீண்டும் தலைதூக்கிய அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக, இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 47 காசுகள் சரிந்து ரூ. 95.73ஆக நிறைவுபெற்றது.
அமெரிக்க டாலரின் வலுவான நிலை மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பலவீனமான செயல்பாடுகள் தொடரந்து, ரூபாயின் மதிப்பின் மீதான அழுத்தம் வெகுவாக இருந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.43 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கி, வர்த்தக நேரத்தின் இடையே இது அதன் அதிகபட்சமான ரூ. 95.33 என்ற நிலையையும் பிறகு குறைந்தபட்சமாக ரூ. 95.76 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 47 காசுகள் சரிந்து ரூ. 95.73ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்று (திங்கள்கிழமை) இந்திய ரிசர்வ் வங்கி டாலர்களை விற்பனை செய்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்த நிலையில், இருக்கும்போதெல்லாம் அதற்குத் தேவையான ஆதரவை வழங்கியதன் விளைவாக, ரூபாயின் மதிப்பு 34 காசுகள் உயர்ந்து 95.26ஆக நிறைவடைந்தது.
The rupee depreciated 47 paise to close at 95.73 against the US dollar on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.