FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 96.43 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 96.43 ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம்
பகிர்:

மும்பை: அந்நிய முதலீடு வெளியேற்றம் மற்றும் அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவையால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 96.43 ஆக நிலைபெற்றது.

இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் டாலரின் மதிப்பு பலவீனமடைந்ததால், ரூபாயின் வீழ்ச்சி சற்றே கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ. 96.29 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் போது ரூ. 96.29 முதல் ரூ. 96.45 வரையிலான வரம்பில் இருந்த ரூபாயின் மதிப்பு, வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் முடிவை விட 8 காசுகள் சரிந்து ரூ. 96.43 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக முடிவடைந்தது.

summary

The rupee declined 8 paise to settle at 96.43 against US dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments