டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு.
bி
மும்பை: வலுவான டாலர் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு பெற்றது.
வலுவான டாலர், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் சாதகமான அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் காரணமாக, ரூபாய் மதிப்பு எதிர்மறைப் போக்கில் வர்த்தகமானதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.01 ஆக தொடங்கி, பிறகான வர்த்தகத்தில், சரிந்து ரூ. 95.29 என்ற குறைந்தபட்ச அளவைத் தொட்டு, இறுதியில் முந்தைய நாள் முடிவை விட 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிலைபெற்றது.
நேற்று (செவ்வாக்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ. 95.07 ஆக நிறைவடைந்தது.
The rupee depreciated 21 paise to close at 95.28 against the US dollar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.