டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ.93.89 ஆக நிலைபெற்றது.
மும்பை: டாலரின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் இறக்குமதி செலவு குறித்த அச்சம் தணிந்ததால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ.93.89 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டு சந்தையில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் செலவினங்களில் ஏற்பட்ட மந்தநிலை ரூபாய் மதிப்புக்கு ஆதரவளித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 94.50 ஆக தொடங்கி, பிறகான வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ. 93.82 ஆகுவும் குறைந்தபட்சமாக ரூ. 94.50 ஐ எட்டியது. வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் முடிவை விட 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு செய்தது.
Advertisement
Advertisement
நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ. 94.41 ஆக நிலைபெற்றது.