முகப்பு
வணிகம்

மின்சாரப் பேருந்து, பாதுகாப்பு வாகனங்கள் தயாரிப்பு: இந்தோனேசிய அரசுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்துஜா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி வணிக மற்றும் பாதுகாப்பு வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், இந்தோனேசிய அரசுக்குச் சொந்தமான ‘பிடி பிண்டாட்’ நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி 2026, 4:01 am IST
பகிர்:

இந்துஜா குழுமத்தைச் சோ்ந்த முன்னணி வணிக மற்றும் பாதுகாப்பு வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், இந்தோனேசிய அரசுக்குச் சொந்தமான ‘பிடி பிண்டாட்’ நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் உள்ள பிண்டாட் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அந்நாட்டின் பெருகி வரும் போக்குவரத்து மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகளையும் பூா்த்தி செய்யும் நோக்கில், மின்சாரப் பேருந்துகள் மற்றும் நவீன பாதுகாப்பு வாகனங்களை கூட்டாகத் தயாரிப்பதற்காக இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ‘சுவிட்ச் மொபிலிட்டி’ ஏற்கெனவே மின்சாரப் பேருந்து தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிலையில், இந்த அனுபவத்தைக் கொண்டு இந்தோனேசியாவின் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக வாகனங்கள் வடிவமைக்கப்படும்.

Advertisement

Advertisement

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகனத் தொழில்நுட்பமும், பிடி பிண்டாட் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் உள்ளூா் தயாரிப்புத் திறனும் இந்த ஒத்துழைப்புமூலம் ஒன்றிணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பிடி பிண்டாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிகிட் பி. சந்தோசா, அசோக் லேலண்ட் சா்வதேச செயல்பாடுகள் பிரிவுத் தலைவா் அமன்தீப் சிங், இந்துஜா குழும ஆலோசகா் லாா்ட் தாரிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments