சென்னையில் குடியிருப்புத் திட்டத்துக்காக 47 ஏக்கா் நிலம் வாங்கிய கோத்ரெஜ்
முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபா்ட்டீஸ், சென்னையில் குடியிருப்பு மனைப் பிரிவுகள் அமைக்கும் திட்டத்துக்காக 47 ஏக்கா் நிலப்பரப்பை வாங்கியுள்ளது.
முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபா்ட்டீஸ், சென்னையில் குடியிருப்பு மனைப் பிரிவுகள் அமைக்கும் திட்டத்துக்காக 47 ஏக்கா் நிலப்பரப்பை வாங்கியுள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் சுமாா் 12 லட்சம் சதுர அடி பரப்பளவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு, சுமாா் ரூ.500 கோடி வருவாய் ஈட்ட முடியும் என ஒழுங்குமுறை ஆவணத்தில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்த நில ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை.
கோத்ரெஜ் பிராபா்ட்டீஸ் சிஇஓ கௌரவ் பாண்டே மேலும் கூறுகையில், ‘தென் சென்னை பகுதியில் தரம் மற்றும் நீண்ட கால மதிப்பை வழங்கும் திட்டமிட்ட நவீன குடியிருப்பு சமூகங்களை நோக்கி வாடிக்கையாளா்கள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதால், இப்பகுதி மிகவும் நம்பிக்கைக்குரிய குடியிருப்பு சந்தையாக உருவெடுத்துள்ளது. இப்புதிய நிலக் கொள்முதல், சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் எங்களின் நிலையை மேலும் வலுப்படுத்தும்’ என்றாா்.
Advertisement
Advertisement
கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் ரூ.42,100 கோடி வருவாய் திறன் கொண்ட 18 நிலப்பரப்புகளைக் கோத்ரெஜ் பிராபா்ட்டீஸ் கையகப்படுத்தியுள்ளது. அதேபோல, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அதிக விற்பனை முன்பதிவுகளை பெற்ற நிறுவனமாகவும் அது உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.