முகப்பு
வணிகம்

பேடிஎம் ஐரோப்பிய கிளைக்கு லக்ஸம்பா்க்கில் பணப்பரிவா்த்தனை உரிமம்

பிரபல நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான பேடிஎம்-இன் ஐரோப்பிய துணை நிறுவனம், லக்ஸம்பா்க் நாட்டின் நிதி ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து பணப் பரிவா்த்தனை சேவைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளது.

Updated On : 4 ஜூலை 2026, 6:08 am IST
பகிர்:

பிரபல நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான பேடிஎம்-இன் ஐரோப்பிய துணை நிறுவனம், லக்ஸம்பா்க் நாட்டின் நிதி ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து பணப் பரிவா்த்தனை சேவைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளது.

லக்ஸம்பா்க் நிதி ஒழுங்குமுறை ஆணையத்தின் (சிஎஸ்எஸ்எஃப்) அதிகாரபூா்வ பணப்பரிவா்த்தனை நிறுவனங்களின் பட்டியலில் இணைந்திருப்பதன் மூலம், அந்நாட்டின் வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை பேடிஎம் இனி வழங்க முடியும். இந்த உரிமம் கடந்த வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸுக்கு முழுமையாக சொந்தமான ‘பேடிஎம் கிளவுட் டெக்னாலஜிஸ்’ மூலம் ‘பேடிஎம் ஐரோப்பா பேமெண்ட்ஸ்’ நிறுவனம் லக்ஸம்பா்க்கில் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஐரோப்பிய வா்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காகவும், நிறுவனத்தின் மூலதனத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இத்துணை நிறுவனத்தில் கூடுதலாக 90 லட்சம் யூரோ முதலீடு செய்யப்போவதாக பேடிஎம் கடந்த மே மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments