பயணிகளின் வாகன விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
பயணிகளின் வாகனங்களின் விலையை ஏப்ரல் 1, 2026 முதல் உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனம் இன்று அறிவித்தது.
புதுதில்லி: அதிகரித்து வரும் செலவுகளைக் காரணம் காட்டி, ஏப்ரல் 1, 2026 முதல் பயணி வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று அறிவித்தது.
வாகனத்தின் சராசரி விலை உயர்வு 0.5 சதவீதமாக இருக்கும் என்றும், வாகனத்தின் அளவு, மாடல்கள் பொறுத்தே இந்த விலை உயர்வு மாறுபடும் என்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள், தளவாடங்கள் மற்றும் பிற செயல்பாட்டுகளை ஓரளவு ஈடுசெய்வதற்காக இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.
Advertisement
Advertisement
டாடா மோட்டார்ஸ், ஹேட்ச்பேக் - டியாகோ முதல் சஃபாரி - எஸ்யூவி வரையிலான பல்வேறு வாகனங்களை ரூ. 4.57 லட்சம் முதல் ரூ. 23.42 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்து வருகிறது.
இதற்கிடையில், பல சவால்களை எதிர்கொள்ளும் பிற வாகன உற்பத்தியாளர்கள், வாகனங்களின் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியும் அல்லது பரிசீலித்து வருகின்றனர்.
Tata Motors Passenger Vehicles Ltd on Friday said it will hike prices of its passenger vehicles from April 1, 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.