3,400 மின்சார வாகனங்களுக்கான ஆர்டரை வென்ற டாடா மோட்டார்ஸ்!
மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், மின்சார வர்த்தகப் போக்குவரத்துத் துறையில் தனது தலைமைத்துவத்தை வலுப்படுத்தியுள்ளது.
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், மின்சார வர்த்தகப் போக்குவரத்துத் துறையில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
சரக்கு போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பயணிகள் போக்குவரத்து துறையில் 3,400க்கும் மேற்பட்ட மின்சார வணிக வாகனங்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளதாக முன்னணி வணிக வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இன்று அறிவித்தது.
சுமார் 2,000 சிறிய வணிக மற்றும் பிக்கப் வாகனங்கள், 900 லாரிகள் மற்றும் 500 பேருந்துகளை உள்ளடக்கிய இந்த ஆர்டர்கள், மின்னணு வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, நுகர்வோர் பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளையும் அத்துடன் பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் உள்ளடக்கியது என்றது.
Advertisement
Advertisement
நடைமுறைச் சூழலில் மின்சார வாகனத் தீர்வுகள் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதையே இந்த விரிவான பயன்பாட்டு நடவடிக்கை பிரதிபலிக்கிறதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது.
கடந்த 12 மாதங்களில், பல்வேறு பணிச் சூழல்கள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை மின்சார வணிக வாகனங்களை அறிமுகப்படுத்தி, தனது தயாரிப்பு வரிசையை நிறுவனம் கணிசமாக வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Commercial vehicle major Tata Motors has secured orders for over 3,400 electric commercial vehicles.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.