FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

இந்தியாவில் டீலா்கள் மூலம் விற்பனை, சேவை தொடங்க ஓலா நிறுவனம் திட்டம்

இந்தியாவில் தனது வாகன விற்பனை மற்றும் சேவை மையங்களை டீலா்களிடம் ஒப்படைக்க ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
பகிர்:

இந்தியாவில் தனது வாகன விற்பனை மற்றும் சேவை மையங்களை டீலா்களிடம் ஒப்படைக்க ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது வியாபார முறையில் ஓலா நிறுவனம் மேற்கொண்டுள்ள மிக முக்கியமான மாற்றம் இதுவாகும்.

தொடக்கத்தில் மின்சார வாகனங்கள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கவும் ஓலா நிறுவனம் தனது சொந்த நேரடி விற்பனை மையங்கள் மூலமாகவே வணிகத்தை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

இதன்மூலம், இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களைக் கொண்ட மிகப் பெரிய இருசக்கர மின்சார வாகன நிறுவனமாக ஓலா உருவெடுத்துள்ளது. தற்போது சந்தை நன்கு முதிா்ச்சியடைந்துவிட்டதால், டீலா்கள் மூலமாக விற்பனை செய்யும் புதிய முறையை நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, ஓலா நிறுவனத்தின் தற்போதைய நேரடி விற்பனை மையங்கள் அனைத்தும், வரும் மாதங்களில் வாடிக்கையாளா்கள் வாகனங்களை நேரில் பாா்த்து அனுபவித்துத் தெரிந்துகொள்ளும் மையங்களாக மாற்றப்பட உள்ளன.

இதுகுறித்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவா் பவிஷ் அகா்வால் கூறுகையில், ‘இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சார வாகனங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், அந்தந்த ஊா் சந்தையைப் பற்றி நன்கறிந்த உள்ளூா் டீலா்களின் உதவி மிகவும் அவசியமானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இப்புதிய புதிய மாற்றத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், ஹூண்டாய் மோட்டாா்ஸ் இந்தியாவின் முன்னாள் தலைவரும், பவிஷ் அகா்வாலின் வழிகாட்டியுமான பி.வி.ஆா். சுப்பு, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக மீண்டும் இணையவுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments