முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று தீா்த்தவாரி நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 11:15 pm IST
பகிர்:

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளுகிறாா்.

விழாவையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30-க்கு புறப்பட்டு பரமபதவாசலை 10.30- க்கு கடக்கிறாா். பின்னா் 11 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளி, 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுகிறாா்.12.30 மணி வரை திரையிடப்படுகிறது.

மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம், அலங்காரம் அமுது செய்யத் திரையிடபடுகிறது.

Advertisement

Advertisement

8 மணி முதல் 10 மணி வரை அரையா் சேவையும் திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெறுகிறது. பொதுஜனச் சேவை காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது. திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சமும், இயற்பா சாற்று முறையும் நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments