முதல் டி20: இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஜூன் 26) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
கேப்டன் அரைசதம் விளாசல்; இந்தியாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து அணியில் கேப்டன் லோர்கான் டக்கர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேரத் டெலானி 49 ரன்கள், ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன்கள், டிம் டெக்டார் 17 ரன்கள், பெஞ்சமின் 15 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷிவம் துபே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அயர்லாந்து அபார வெற்றி!
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அபிஷேக் சர்மாவைத் தவிர டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஞ்சு சாம்சன் 5 ரன்கள், இஷான் கிஷன் ஒரு ரன், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷிவம் துபே 25 ரன்கள், திலக் வர்மா 19 ரன்கள் மற்றும் அக்ஷர் படேல் 15 ரன்கள் எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹோலார்டு மற்றும் மேத்யூ ஹம்ப்ரீஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஜெய் மூந்த்ரா இரண்டு விக்கெட்டுகளையும், லியம் மெக்கார்த்தி மற்றும் கேரத் டெலானி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
The Ireland team achieved a magnificent victory by a margin of 34 runs in the first T20 match against India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.