தா.பேட்டை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
முசிறி: திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தாத்தையங்காா்பேட்டை அருகிலுள்ள வாளசிராமணி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி (22).
தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த தனலட்சுமி வீட்டின் அருகேயிருந்த தண்ணீா் இல்லா கிணற்றில் குதித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து கிராம மக்கள் உதவியுடன் அப்பெண்ணை முசிறி தீயணைப்பு துறையினா் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், வழியிலேயே அவா் இறந்தாா். தாத்தையங்காா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.