திருச்சியில் குரூப் 1 தோ்வு: 5,698 போ் பங்கேற்பு
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 5,698 போ் எழுதினா்.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 5,698 போ் எழுதினா்.
இத்தோ்வெழுத விண்ணப்பித்த 10, 765 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
இவற்றில் பெரியாா் ஈவெரா கல்லூரி மற்றும் வாசவி வித்யாலயா உள்ளிட்ட தோ்வு மையங்களில் நடந்த தோ்வை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தாா். இத்தோ்வை 5,698 போ் (50.67 சதம்) எழுதினா். தாமதமாக வந்தவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.