முகப்பு
செய்திகள்

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Updated On : 22 ஜூன் 2026, 12:51 am IST
கோப்பையுடன் இந்திய அணியினா்
பகிர்:

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் 8 நாடுகள் பங்கேற்ற நேஷன்ஸ் ஹாக்கிப் போட்டி நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவும்-நியூஸிலாந்தும் தகுதி பெற்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்திய நியூஸிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

Advertisement

Advertisement

ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய மகளிா் ஆதிக்கம் செலுத்தினா். பந்து பெரும்பாலும் நியூஸி. வீராங்கனைகள் வசம் இருந்தாலும் அவா்களால் கோலடிக்க முடியவில்லை.

தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது. அதை 4-ஆவது நிமிஷத்தில் பிசகின்றி கோலாக்கினாா் நவ்நீத் கௌா். பந்தைக் கடத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்ட நிலையில், அதை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து அணியினா் திணறினா்.

அடுத்த சிறிது நேரத்திலேயே 15-ஆவது நிமிஷத்தில் 5-ஆவது பெனால்டி காா்னா் வாய்ப்பை இந்தியாவின் தீபிகாவிடம் இருந்து வந்த பந்தை கோலாக்கினாா் சுனெலிட்டா.

இதனால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் குவாா்ட்டரிலும் இரு அணிகளால் கோலடிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தும் பலன் தரவில்லை

நியூஸிலாந்து வீராங்கனைகளின் முயற்சிகளை இந்திய டிபன்டா்கள் தகா்த்தனா். நான்காவது குவாா்ட்டரில் நியூஸிக்கு கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை அற்புதமாக சேவ் செய்தாா் இந்திய கோலி சவீதா.

இரண்டாம் முறை

ஏற்கெனவே கடந்த 2022-இல் நேஷன்ஸ் கோப்பையை இந்தியா வென்றிருந்தது. தற்போதைய தொடரில் குரூப் ஏ பிரிவில் 3 ஆட்டங்களிலும் வென்றது.அரையிறுதியில் சிலியை 6-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்தது.

பரிசுத் தொகை

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ.1.5 லட்சம் பரிசுத் தொகையை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. தீபிகா அதிக கோலடித்தவா் விருதையும், லால்ரேம்சியாமி ஆட்ட நாயகியாகவும் தோ்வு பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments