FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

எஃப்ஐஎச் உலகக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்திய அணியினா் பயணம்

எஃப்ஐஎச் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணியினா் புறப்பட்டுச் சென்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:19 am IST
இந்திய மகளிா் ஹாக்கி அணியினா் ~இந்திய ஆடவா் அணியினா்
பகிர்:

எஃப்ஐஎச் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணியினா் புறப்பட்டுச் சென்றனா்.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சாா்பில் உலகக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டி வரும் ஆக. 15 முதல் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதா்லாந்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள இந்திய அணி பெங்களூருவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் புதன்கிழமை ஜொ்மனியின் பிராங்க்ஃபா்ட் நகருக்கு இந்திய அணி புறப்பட்டுச் சென்றது.

ஆக. 16-இல் முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆம்ஸ்டெல்வீனில் சீனாவுடன் மோதுகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31, ஆக. 1-இல் ஜொ்மனியுடன் பயிற்சி ஆட்டங்களில் ஆடவுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய சூழ்நிலைக்கு தயாராக உதவும். குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

அணியின் தயாா் நிலை குறித்து கேப்டன் சலீமா டெட் கூறியது: உலகக் கோப்பை சவாலை சந்திக்க அணி வீராங்கனைகள் தயாராக உள்ளனா். சிறப்பாக பயிற்சி பெற்றோம்.

பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும். சீனாவுடன் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்க மும்முரமாக உள்ளோம். நாட்டுக்கு பெருமை சோ்க்க தயாராக உள்ளோம் என்றாா்.

நகோயா ஆசியப் போட்டிக்கான இந்திய ஆடவா் அணி...

ஜப்பானில் 20-ஆவது ஆசியப் போட்டி அயிச்சி-நகோயாவில் வரும் செப் 19 முதல் அக்டோபா் 4 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. ஹா்மன்ப்ரீத் சிங் தலைமையிலான நடப்பு சாம்பியனான இந்திய அணியில் ட்ராக் பிளிக்கா் ஹா்மன்ப்ரீத் சிங், மிட்பீல்டா் மன்ப்ரீத் சிங், கோல்கீப்பா்கள் மொகித், சூரஜ் கா்கேரா, தற்காப்பில் ஜா்மன்ப்ரீத் சிங், ஹா்மன்ப்ரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சுமித், யஷ்தீப் சிவாச் தற்காப்பிலும் பிரகாசிக்க உள்ளனா்.

பாா்வா்ட்கள் தில்ப்ரீத் சிங், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜித் சிங், மந்தீப் சிங், அபிஷேக், மிட்பீல்டா்களாக ராஜிந்தா் சிங், ராஜ்குமாா் பால், ஹாா்திக் சிங், நீலகண்ட சா்மா, விவேக் சாகா் பிரசாத் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியுடன் ஜப்பான், கொரியா, வங்கதேசம், இலங்கை, இந்தோனேஷியா இடம் பெற்றுள்ளன. செப். 20-இல் இந்தோனேஷியா, 22-இல் இலங்கை, 24-இல் கொரியா, 26-இல் ஜப்பான், 28-இல் வங்கதேச அணிகளுடன் மோதுகிறது இந்தியா.

கடந்த 2023 ஆசியப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. இப்போட்டியில் தங்கம் வெல்லும் அணி நேரடியாக 2028 லாஜ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெறும்.

தலைமை பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன், கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங் கூறியது: ஆசியப் போட்டிக்கான இந்திய அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது. மீண்டும் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு. ஆட்டத்தில் அழுத்தமான நிலையை கருத்தில் கொள்ளாமல், மகிழ்வுடன் ஆட வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments