உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் அணி நெதர்லாந்திடம் தோல்வியுற்றது பற்றி....
உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவா் அணி, நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவியது.
உலக கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்து அணியை சனிக்கிழமை எதிர்கொண்டது. நெதா்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு குவாட்டர்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இந்தநிலையில் ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் வீரர் டுகோ டெல்கென்கேம்ப் முதல் ஃபீல்டு கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து அந்த அணியின் வீரர்கள் ஜெப் ஹோட்மேக்கர்ஸ் 51வது நிமிடத்திலும், தைஜஸ் வான் டாம் 55வது நிமிடத்திலும் அடுத்தடுத்து ஃபீல்டு கோல்கள் அடிக்க நெதர்லாந்து 3-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்தது.
Advertisement
Advertisement
இந்திய அணி தரப்பில், 52வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பைப் பயன்படுத்தி கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தார். ஆனால் எஞ்சிய நேரத்தில் இந்தியாவுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக முடிவில் நெதர்லாந்து 3-1 கோல் கணக்கில் வென்றது.
The Indian men's hockey team lost 1-3 to Olympic champions the Netherlands in a must-win second round match of the FIH World Cup here on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.