FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹாக்கி: கடைசி நிமிஷத்தில் கோல்..! பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா!

ஆசிய விளையாட்டில் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் வென்ற இந்திய ஆடவர் அணி குறித்து...

வெற்றிக் களிப்பில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி - படம்: எக்ஸ் / ஹாக்கி இந்தியா
பகிர்:

ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 4-3 என பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆடவருக்கு ஹாக்கி அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 5,13ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். அடுத்து 23ஆவது நிமிஷத்தில் மற்றுமொரு இந்தியர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் 3-0 என இந்தியா முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த பாகிஸ்தான் அணி 30, 45, 49ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 3-3 என சமன்படுத்தியது. மிகவும் பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியின் கடைசி நிமிஷத்தில் (60’) இந்திய வீரர் அபிஷேக் கோல் அடித்து 4-3 என வெற்றிக்கு வித்திட்டார்.

மற்றுமொரு அரையிறுதியில் தென் கொரியா - மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கிறது.

இந்த வெற்றியின் மூலமாக நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்திய அணி 10 தங்கம், 22 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கங்கள் உள்பட 63 பதக்கங்களை வென்றுள்ளன.

summary

India eke out narrow 4-3 win over Pakistan to enter final of men's hockey at Asian Games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments