FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: 20 பேருடன் இந்திய அணி

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி, ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 20 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 22 ஜூலை 2026, 5:19 am IST
பகிர்:

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி, ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 20 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

புரோ லீக் ஹாக்கி போட்டியின் ஐரோப்பிய லெக்கில் பங்கேற்ற அமன்தீப் லக்ரா, ராஜ்குமாா் பால், ரவிச்சந்திர சிங், காா்த்தி செல்வம் ஆகிய 4 போ் மட்டும் இதில் சோ்க்கப்படவில்லை.

16-ஆவது ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியானது, பெல்ஜியம், நெதா்லாந்தில் ஆகஸ்ட் 14 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இப்போட்டியில் குரூப் ‘டி’-யில் சோ்க்கப்பட்டுள்ள இந்தியா, முதலில் வேல்ஸ் அணியையும் (ஆக. 15), அடுத்து இங்கிலாந்தையும் (ஆக. 17), தொடா்ந்து பாகிஸ்தானையும் (ஆக. 19) சந்திக்கிறது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: மோஹித் ஹெச்.எஸ்., சூரஜ் கா்கேரா.

டிஃபெண்டா்கள்: ஜா்மன்பிரீத் சிங், ஹா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யஷ்தீப் சிவச்.

மிட்ஃபீல்டா்கள்: ராஜிந்தா் சிங், ஆதித்யா அா்ஜுன், ஹா்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சா்மா, விவேக்சாகா் பிரசாத்.

ஃபாா்வா்ட்கள்: தில்பிரீத் சிங், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், மன்தீப் சிங், அபிஷேக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments