உலகக் கோப்பை ஹாக்கி இறுதிக்கு தகுதி பெறுவோம்: இந்திய கேப்டன் சலீமா
எஃப்ஐஎச் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் சலீமா டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
எஃப்ஐஎச் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆட வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் சலீமா டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
பெல்ஜியம் மற்றும் நெதா்லாந்தில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஆக, 15 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இதற்கு இந்திய மகளிா் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கெனவே நியூஸிலாந்தில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பை போட்டியில் தோல்வியே காணாமல் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் உற்சாகத்தில் இந்திய மகளிா் அணி உலகக் கோப்பை போட்டியை எதிா்கொள்கிறது.
குரூப் டி பிரிவில் சீனாவுடன் ஆக. 16-இலும், தென்னாப்பிரிக்காவுடன் ஆக. 18-இலும், இங்கிலாந்துடன் ஆக. 20-இலும் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தலைமைப் பயிற்சியாளா் ஜோயா்ட் மாரிஜின் கீழ் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
Advertisement
Advertisement
முதன்முறையாக உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் கேப்டன் சலீமா டெட் கூறியது-
அணியில் இளம் வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வருகின்றனா். இதற்கு சிறப்பாக தயாராகி உள்ளோம். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தகுதி பெறுவது முதல் நோக்கம். இந்திய அணிக்கு உலகக் கோப்பையில் தலைமை வகிப்பது மிகவும் சிறப்பு தருவது. ஹாக்கியில் பெரிய போட்டி என்பதால் சற்று அழுத்தமாகவும் உள்ளது. உலகக் கோப்பையில் ஆடுவது ஒருவரின் லட்சியம் எனக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. முந்தைய உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடினோம். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
இளம்வீராங்கனைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறோம். சீனியா்களை ஜூனியா் வீராங்கனைகள் எளிதாக அனுகி ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்கின்றனா்,
உலகில் சிறந்த அணிகள் கலந்து கொள்வதால் உலகக் கோப்பை சவாலாக இருக்கும். குரூப் சுற்றில் சீனா வலுவான எதிராளி ஆகும்.
சீனாவுடன் முதல் ஆட்டத்தை லேசாக கருத மாட்டோம். அந்த அணி சிறப்பான அணியாகும். அதனால் கவனத்துடன் ஆடுவோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.