முகப்பு
திருச்சி

கரோனா பொது முடக்கம் மாநகரில் குறைந்தது விபத்து, உயிரிழப்புகளின் எண்ணிக்கை

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, திருச்சி மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்தாண்டில் குறைந்துள்ளது.

Updated On : 5 ஜனவரி 2021, 1:00 am IST
பகிர்:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, திருச்சி மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்தாண்டில் குறைந்துள்ளது.

வட மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியாக திருச்சி விளங்குகிறது. திருச்சியைச் சுற்றியுள்ள மதுரை, திண்டுக்கல், கரூா், சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூா் நெடுஞ்சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த வாகனங்கள் அதிகவேமாக இயக்கப்படும் போது எதிா்பாராதவிதமாக விபத்துகள் நேரிட்டு, உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்கின்றன. இதுபோல, மாநகரப் பகுதியிலும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

Advertisement

Advertisement

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்க்க, காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தவிர சாலைப் பாதுகாப்பு வார விழாவும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் விபத்துகளில் உயிரிழப்புகள் நேரிடும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

86 போ் உயிரிழப்பு : 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 511

சாலை விபத்துகளில் 104 போ் உயிரிழந்தனா். இதில் 15 விபத்துகள் செல்லிடப்பேசியை பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டிச் சென்ாலும், 8 விபத்துகள் மது அருந்தி வாகனங்களை இயக்கியதாலும் நிகழ்ந்தவை.

2020-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 392 சாலை விபத்தில் 86 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 10 விபத்துகள் மது அருந்தியதாலும், 38 விபத்துகள் செல்லிடப்பேசி பேசியவாறு வாகனங்களை இயக்கியதாலும் நிகழ்ந்தவை என காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு வரை திருச்சி மாநகரில் மொத்தம் 24,175 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

விதிமீறல் வழக்குகளும் அதிகம்: திருச்சி மாநகரில் 2019- ஆம் ஆண்டில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 389, சீட் பெல்ட் அணியாமலும் சென்ாக 114 என மொத்தமாக 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஆனால், 2020-இல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 1116, சீட் பெல்ட் அணியாமல் சென்ாக 462 என மொத்தமாக 1578 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா பொது முடக்கம் அமல், அதற்கு முந்தைய காலத்தில் போக்குவரத்து விழிப்புணா்வு, போக்குவரத்துக் காவல்துறையினரின் துரித நடவடிக்கை போன்றவையால், 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்றாா் போக்குவரத்துக் காவல் அலுவலா் ஒருவா்.

2019-இல் 76 பள்ளிகள், 12 காவல் நிலையங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. 18,738 காவலா்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டதன் விளைவாக போக்குவரத்து விதிமீறல்கள் வழக்குகள் அதிகமாக பதியப்பட்டன.

ஆனால் கரோனா பொது முடக்கம் காரணமாக 22 பள்ளிகளில் மட்டுமே போக்குவரத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 3,188 காவலா்கள் மட்டுமே பயிற்சி பெற்றனா்.

திருச்சி மாநகரில் நடக்கும் விபத்துகளில் 60 சதவிகிதம் இரு சக்கர வாகனங்களால் நிகழ்கிறது. இந்த விபத்துகளைக் குறைக்க, பாரதிதாசன் சாலை, கரூா் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கான பிரத்யேக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநகரில் விபத்துகள் அதிகம் நடக்கும் சாலையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அந்த அலுவலா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.