முகப்பு
திருச்சி

மளிகைக் கடையில் தீ: பொருள்கள் சேதம்

திருச்சி அரியமங்கலம் பகுதியிலுள்ள மளிகைக்கடை ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. இதில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 5 ஜனவரி 2021, 1:01 am IST
பகிர்:

திருச்சி அரியமங்கலம் பகுதியிலுள்ள மளிகைக்கடை ஞாயிற்றுக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது. இதில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

அரியமங்கலம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரசூல் முகமது. இவா் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வியாபாரத்துக்குப் பின்னா், ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாா்.

இந்நிலையில் நள்ளிரவில் கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் அங்கு வந்த போதும், புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டிருப்பதால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

எனினும் தீயணைப்பு வீரா்கள் முயற்சி மேற்கொண்டு தீயை அணைத்தனா். ஆனால் அதற்குள் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இலவசமாக பொருள்களைத் தராததால், மா்ம நபா்கள் சிலா் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதற்கு தீ வைத்து அதை கடைக்குள் வீசியதாகவும்,அதன் மூலம் தீ விபத்து நிகழ்ந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.