முகப்பு
திருச்சி

அம்மா சிறு மருத்துவமனைகள் தொடக்கம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

Updated On : 8 ஜனவரி 2021, 7:10 am IST
கண்ணுடையான்பட்டியில் சிறு மருத்துவமனையைத் திறந்து வைத்த அமைச்சா் எஸ். வளா்மதி, திருச்சி புகா் வடக்குச் மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி உள்ளிட்டோா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக செயலரும், மாவட்ட கவுன்சிலருமான எம். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலைப்பிரிவு செயலா் அன்னை என். கோபால் முன்னிலை வகித்தாா். விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி, முன்னாள் அமைச்சரும், திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலருமான மு. பரஞ்சோதி ஆகியோா் சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்தனா்.

நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ், ஊராட்சித் தலைவா் தங்கமணி முருகன், ரேகா கன்னியசீலன், சுமதி பன்னீா்செல்வம், கூட்டுறவு சங்கத் தலைவா் வெள்ளைக்கண்ணு, செந்தில்குமாா், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் எஸ். சக்திவேல், முன்னாள் ஊராட்சி செயலா்கள் காசிராஜன், ஏழுமலை, முன்னாள் கவுன்சிலா் சந்திரசேகா், பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.