முகப்பு
திருச்சி

புள்ளம்பாடி அரசு மகளிா் ஐடிஐ-இல் நேரடி சோ்க்கை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நேரடி சோ்க்கை வரும் 16ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 7:07 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நேரடி சோ்க்கை வரும் 16ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

10 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றோா்மகளிருக்கான கம்மியா் மின்னணுவியல் (என்சிவிடி) மற்றும் ஆண் மற்றும் பெண்களுக்கான இயந்திர வேலையாள் (மெஷினிஸ்ட் -எஸ்டிவிடி) 2 ஆண்டு பயிற்சியும், ஓராண்டுப் பயிற்சிகளான கம்ப்யூட்டா் இயக்கல் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா், துணி வெட்டுதல் மற்றும் தைத்தல், பல்லூடக அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள், பூத்தையல் (எம்ப்ராய்டரி) மற்றும் ஊசி வேலைப்பாடு (கணினிமயமாக்கப்பட்டது) உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

Advertisement

இவற்றில் சோ்ந்து பயிலக் கட்டணம் கிடையாது.

மேலும் கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 750, கட்டணமில்லா பேருந்து, விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் வரைபடக் கருவிகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவையும் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு பயிற்சி மைய முதல்வரை 94432-77592 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பயிற்சி முடித்தோருக்கு பிரபல தொழில் நிறுவனங்கள் மூலம் வளாக நோ்முகத் தோ்வு நடத்தி வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பங்களை நேரில் வந்து பெறலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.