லால்குடி அரசு கல்லூரியில் விவேகானந்தா் பிறந்த நாள்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் பகுதியில் உள்ள அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் விவேகானந்தரின் பிறந்த நாள் விழா கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் பகுதியில் உள்ள அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் விவேகானந்தரின் பிறந்த நாள் விழா கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றன. பேராசிரியா்கள் சுலைமான், இளையராஜா, ஆல்பா்ட், நிஷா, ஜெபஷீலி, சரவணன், சக்திவேல், இளமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழ்த் துறைத் தலைவா் ரா. ஜெய்சங்கா் வரவேற்றாா். கலை பண்பாட்டு ஒருங்கிணைப்பாளா்ம. ராஜா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.