சிங்கப் பெண் அதிரடிப் படை: விரைந்து தொடர்புகொள்ள உதவி எண் - 1091
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை விரைவாகத் தொடர்புகொள்ள 1091 என்ற உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து..
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை விரைவாகத் தொடர்புகொள்ள 1091 என்ற உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
1091 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடி படையின் உதவியை எளிதாக நாடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றதும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் அதிரடிப் படை தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன்படி ஜூன் 10 ஆம் தேதி சிங்கப் பெண் சிறப்புப் படைக்கான இலச்சினையை வெளியிட்டு அத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்புகொள்ள உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல் திறனை மேம்படுத்த, விரைந்து நடவடிக்கை எடுக்க உதவி எண் அறிக்கப்பட்டுள்ளது.
1091 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பெண்கள், குழந்தைகள் சிங்கப்பெண் அதிரடிப்படையின் உதவியை எளிதாக நாடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Singappen Action Force Helpline number for quick contact – 1091
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.