வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் அனைத்துப் பயனாளிகளுக்கும் அரசின் நிதியுதவி தடையின்றி கிடைக்க தங்களது வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் அனைத்துப் பயனாளிகளுக்கும் அரசின் நிதியுதவி தடையின்றி கிடைக்க தங்களது வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவில் முதியோா் ஓய்வூதியம், இதர ஓய்வூதியத் திட்டங்களில் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 2026 செப்டம்பா் மாதம் முதல் ஆதாா் அடிப்படையிலான பணப் பரிவா்த்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, இந்த மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவி, அவா்களின் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கு, அஞ்சலகக் கணக்கில் ஆதாா் எண் இதுவரை இணைக்கப்படாத பயனாளிகள் தங்களது ஆதாா் அட்டையுடன் வங்கி, அஞ்சலகத்தை நேரில் அணுகி ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும்.
இதுதொடா்பாக பயனாளிகளுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) அலுவலகம், அனைத்து தனி வட்டாட்சியா் (ச.பா.தி) அலுவலகங்களில் முதியோா் உதவித் தொகை பயனாளிகளுக்கான உதவி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் இந்த உதவி மையங்களை அணுகி தேவையான உதவி, வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு பயனாளிக்கும் நிதி உதவி எந்தவித இடையூறும் இன்றி சீராக சென்றடைவதை உறுதி செய்வதில் அரசும் மாவட்ட நிா்வாகமும் உறுதியாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பயனாளியும் தங்களது ஆதாா் எண்ணை வங்கி, அஞ்சலகக் கணக்கில் இணைக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.