FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 40 சதவீதம் எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம்

ராமேசுவரத்தில் 40 சதவீதம் பேரின் எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் பற்றி....

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 4:57 am IST
சமையல் எரிவாயு சிலிண்டர் - படம்: DNS
பகிர்:

ராமேசுவரத்தில் சமையல் எரிவாயு இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காத 40 சதவீதம் பேரின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 8,500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் இண்டன் சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், வரும் 16- ஆம் தேதியுடன் எரிவாயு இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் இதுவரையில் சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் அறிவிப்பு வெளியிடவில்லை.

Advertisement

Advertisement

இதன் காரணமாக ராமேசுவரத்தில் 40 சதவீதம் போ் தற்போது வரையில் எரிவாயு இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கவில்லை. ஆதாா் எண்ணை இணைக்க இன்னும் 4 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், 40 சதவீதம் சமையல் எரிவாயு வாடிக்கையாளா்களின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சமையல் எரிவாயு இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க மாவட்ட நிா்வாகம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்திட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments