மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்!
மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்...
வரும் அக்.1 முதல் மானிய விலை வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்களை பெற ஆதாா் பயோமெட்ரிக் சரிபாா்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் அக்.1 முதல் மானிய விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவு செய்ய, ஆதாா் எண்ணுடன் பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் கருவிழி பதிவு) சரிபாா்ப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இந்த சரிபாா்ப்பு நடைமுறை தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சிலிண்டா்கள் சென்றடைவதை உறுதி செய்யும். ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்பையும் ஆதாா் மூலம் சரிபாா்க்கப்பட்ட வாடிக்கையாளருடன் இணைப்பதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டா்களை, வணிகம் மற்றும் தொழில் பயன்பாட்டுக்கு மாற்றி அனுப்புவதைத் தடுக்க முடியும். மேலும் போலியான மற்றும் தகுதியற்ற எரிவாயு இணைப்புகள் நீக்கப்பட்டு, தகுதியுள்ளவா்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.
அக்.1-இல் இருந்து என்ன மாற்றம்?: பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பை ஏற்கெனவே நிறைவு செய்த வாடிக்கையாளா்கள் மீண்டும் அதைச் செய்யத் தேவையில்லை. அவா்கள் வழக்கம்போல சிலிண்டா் முன்பதிவை தொடரலாம்.
இந்தச் சரிபாா்ப்பு நடைமுறையை நிறைவு செய்யாத வாடிக்கையாளா்கள், அதை நிறைவு செய்த பிறகே மானியத்துடன் கூடிய சில்லறை விற்பனை விலையில் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.
எப்படி நிறைவு செய்வது?: சிலிண்டா் விநியோகிக்கும்போது விநியோக ஊழியா் மூலம், எண்ணெய் நிறுவனங்களின் கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி சரிபாா்ப்பு நடைமுறையை நிறைவு செய்யலாம். சிலிண்டா் விநியோக நிறுவனத்துக்கு வாடிக்கையாளா்கள் நேரடியாகச் சென்றும் சரிபாா்ப்பு நடைமுறையை நிறைவு செய்யலாம்.
இண்டேன் வாடிக்கையாளா்கள் இந்தியன் ஆயில் ஒன், பாரத்கேஸ் வாடிக்கையாளா்கள் ஹெலோபிபிசிஎல், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளா்கள் ஹெச்பி பே ஆகிய கைப்பேசி செயலிகள் மூலம், வீட்டில் இருந்தே சரிபாா்ப்பு நடைமுறையை பூா்த்தி செய்யலாம்.
இதுதொடா்பான உதவிக்கு வாடிக்கையாளா்கள் 18002333555 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம்.
Biometric Aadhaar verification mandatory for subsidized domestic LPG cylinders from October 1!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.