ஆதார் முகவரி மாற்றம்! விண்ணப்ப நிலை அறிவது எப்படி?
ஆதார் முகவரி மாற்றம் கோரிய விண்ணப்ப நிலை குறித்து அறிவது எப்படி என்பது பற்றி..
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்காக விண்ணப்பித்திருப்பவர்கள் தங்களது விண்ணப்ப நிலை குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
ஒருவர் முகவரி மாற்றக் கோரிக்கையின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது? என்பது குறித்து ஆதார் அமைப்பு பல வகைகளில் விளக்கி வருகிறது.
பொதுவாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செயல்படுத்தப்பட்டதும், உங்கள் கோரிக்கை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது என்று முதலில், விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வரும். அதனைக் கொண்டும் உறுதி செய்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
இல்லை, குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால், ஆன்லைனில் மூலம் முகவரி மாற்றக் கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்கும் முறை
முதலில் யுஐடிஏஐ இணையதளத்திற்குச் செல்லவும்.
அதில் எனது ஆதார் (My Aadhaar) பிரிவின் கீழ் உள்ள ஆதார் புதுப்பிப்பு நிலையைச் சரிபார்க்கவும் (Check Aadhaar Update Status) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் ஒரு படிவம் வரும். அந்த படிவத்தில் உங்கள் விவரங்களை உள்ளிடவும்
அதாவது, ஆதார் கோரிக்கை நிலையை அறிய, ஆதார் எண் அல்லது புதுப்பிக்க விண்ணப்பித்தபோது வழங்கப்பட்ட கோரிக்கை எண் (URN) ஆகியவற்றை வழங்க வேண்டியிருக்கும்.
அனைத்தையும் சரியாக பதிவிட்டு சப்மிட் கொடுத்ததும் முகவரி மாற்றக் கோரிக்கை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை அடுத்த பக்கத்தில் காண்பிக்கும்.
ஆதார் முகவரி மாற்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்கு, முகவரியைக் கொண்ட சான்றிதழ் அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
1. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
2. பான் அட்டை (பான் கார்டு)
3. வங்கி கணக்குப் புத்தகம் (பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை)
3. குடும்ப அட்டை
4. வாக்காளர் அடையாள அட்டை
5. மாற்றுத்திறனாளி அட்டை
6. ஊரக வேலை அட்டை
6. மின்சாரக் கட்டண ரசீதுகள் (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது),
7. தொலைபேசி லேண்ட்லைன் கட்டண ரசீது/ தொலைபேசி (போஸ்ட்பெய்ட் மொபைல்) கட்டண ரசீது/ பிராட்பேண்ட் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)
8. தண்ணீர்க் கட்டண ரசீது (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)
9. எரிவாயு இணைப்பு (மூன்று மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)
10. காப்பீட்டு ஆவணம் (ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு மட்டும்)
11. சொத்து வரி ரசீது (ஓராண்டுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது)
12. குடியிருக்கும் வீட்டின் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்/ தானப் பத்திரம்
13. பதிவு செய்யப்படாத வாடகை/ குத்தகைப் பத்திரம் இதில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து ஆதார் அட்டையில் முகவரி மாற்றிக் கொள்ளலாம்.
Aadhaar Address Change How to Check Application Status?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.