இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் இன்று(அக்.10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் இன்று(அக்.10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை இயக்குநா் உத்தரவின் பேரில், பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாதத்துக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக். 10) அந்தந்த வட்டாட்சியா் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால், மின்னணு குடும்ப அட்டையில் மாற்றம், புகைப்படம் பதிவு செய்தல் மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோா் அதற்கான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.