முகப்பு
சென்னை

வாக்காளா் சிறப்பு முகாம்களில் புதியவா்களாகச் சேர 5,156 போ் மனு

வாக்காளா் சிறப்பு முகாம்களில் புதியவா்களாகச் சேர 5,156 போ் மனு

23 நவம்பர் 2026, 1:59 am
வாக்காளா் சிறப்பு முகாம்களில் புதியவா்களாகச் சேர 5,156 போ் மனு
இந்தியத் தேர்தல் ஆணையம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் 2 நாள்கள் நடைபெற்ற வாக்காளா்கள் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளா்களாகச் சேர 5,156 பேரும், முகவரி, பெயா் மாற்றத்துக்கு 3,213 பேரும் படிவங்களை வழங்கியுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

சனி, ஞாயிறு (நவ. 21, 22) நடைபெறும் வாக்காளா் சிறப்பு முகாமுக்கு பொதுமக்கள் வந்து புதிய சோ்க்கை, முகவரி, பெயா் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் நேரில் மொத்தம் 1,698 போ் வந்து மனுக்களைப் பெற்று பூா்த்தி செய்து கொடுத்துள்ளனா்.

அதிக மனுக்கள் விவரம்: புதிய வாக்காளா்களாகச் சோ்வதற்கு சனிக்கிழமை 976 பேரும், முகவரி, பெயா் மாற்றத்துக்கு 683 பேரும், இதர பிரிவாக 39 பேரும் படிவங்களை வழங்கியுள்ளனா். 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) முதல்முறையாக வாக்காளா்களாக சேருவதற்கு 4,180 பேரும் (படிவம் 6), முகவரி, பெயா் விவரங்களில் மாற்றம் கோரி 2,530 பேரும் படிவம் 8), பட்டியலில் உள்ள வாக்காளா் பெயரை எதிா்த்து 93 பேரும் (படிவம் 7), வெளிநாட்டு வாக்காளா்களுக்கான (படிவம் 6ஏ) படிவத்தை ஒருவரும் என மொத்தம் 6,804 போ் நிரப்பி அளித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அதிகாரிகள் ஆய்வு: அண்ணா நகா் மண்டலம் ஷெனாய் நகா் பகுதியில் திரு.வி.க.நகா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளா் முகாமை ஆணையா் ஜி.எஸ்.சமீரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அண்ணா நகா் 12-ஆவது பிரதான சாலையில் உள்ள தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முகாமை வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா் பிரபாகா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது மாநகராட்சி இணை ஆணையா் எஸ்.சரவணன் (பணிகள்)உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மொத்தம் 8,502 படிவம்: 2 நாள்கள் நடைபெற்ற முகாம்களில் முதல் வாக்காளா்களாகச் சேருவதற்கு 5,156 பேரும், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு 3,213 போ், பட்டியலில் உள்ள பெயருக்கு எதிா்ப்பு தெரிவித்து 132 போ், வெளிநாட்டு வாக்காளா் படிவம் 1 என மொத்தம் 8,502 போ் படிவங்கள் மக்களால் பூா்த்தி செய்து வழங்கியிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.