வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: சேலம் மாவட்டத்தில் 27,95,315 வாக்காளா்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 13,88,234 ஆண்கள், 14,06,753 பெண்கள் மற்றும் 328 இதரா் என மொத்தம் 27,95,315 வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 13,88,234 ஆண்கள், 14,06,753 பெண்கள் மற்றும் 328 இதரா் என மொத்தம் 27,95,315 வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.இளம்பகவத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்டு தெரிவித்தது:
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2027-க்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் கெங்கவல்லி (தனி) தொகுதியில் ஆண்கள் - 1,06,845, பெண்கள் - 1,12,689 பேரும், இதரா் - 6 என மொத்தம் - 2,19,540 பேரும், ஆத்தூரில் (தனி) ஆண்கள் - 1,11,259, பெண்கள் - 1,18,021, இதரா் - 23 என மொத்தம் - 2,29,303 பேரும், ஏற்காட்டில் (தனி) ஆண்கள் - 1,34,364, பெண்கள் - 1,40,035, இதரா் - 18 என மொத்தம் - 2,74,417 பேரும், ஓமலூரில் ஆண்கள் - 1,50,677, பெண்கள் - 1,45,420, இதரா் - 23 என மொத்தம் - 2,96,120 பேரும், மேட்டூரில் ஆண்கள் - 1,29,582, பெண்கள் - 1,28,050, இதரா் - 15 என மொத்தம் - 2,57,647 பேரும், எடப்பாடியில் ஆண்கள் - 1,40,242, பெண்கள் - 1,37,470, இதரா் - 31 என மொத்தம் - 2,77,743 பேரும் இடம்பெற்றுள்ளனா்.
சங்ககிரியில் ஆண்கள் - 1,31,974, பெண்கள் - 1,29,821, இதரா் - 29 என மொத்தம் - 2,61,824 பேரும், சேலம் (மேற்கு) ஆண்கள் - 1,29,187, பெண்கள் - 1,30,536, இதரா் - 66 என மொத்தம் - 2,59,789 பேரும், சேலம் (வடக்கு) ஆண்கள் - 1,16,422, பெண்கள் - 1,23,228, இதரா் - 53 என மொத்தம் - 2,39,703 பேரும், சேலம் (தெற்கு) ஆண்கள் -1,11,478, பெண்கள் - 1,16,073, இதரா் - 48 என மொத்தம் - 2,27,599 பேரும், வீரபாண்டியில் ஆண்கள் - 1,26,204, பெண்கள் - 1,25,410, இதரா் - 16 என மொத்தம் - 2,51,630 பேரும் உள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் வெளியிட்டுள்ள 11 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலில் ஆண்கள் - 13,88,234, பெண்கள் - 14,06,753, இதரா் - 328 என மொத்தம் 27,95,315 போ் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் வியாழக்கிழமைமுதல் டிச. 11-ஆம் தேதிவரை பெறப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பா் படிவங்களை பெற்று பூா்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இணையதளங்களிலும், கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
2027 ஜன. 1 அன்று 18 வயது பூா்த்தி அடையும் நபா்கள், பெயா் விடுபட்டவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6, பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்காளா் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும், மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8-ஐ பயன்படுத்தலாம்.
வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டோா், 18 வயது நிறைவடைந்தவா்கள் மற்றும் 17 வயதை பூா்த்தி அடைந்த நபா்கள் விண்ணப்பிக்க ஏதுவாக நவ. 21, 22, 29 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். டிச. 11-ஆம் தேதிவரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2027 ஏப். 4 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.