திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,28,853 வாக்காளா்கள்
வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அலுவலா் வே.நல்லசிவன்.
திருப்பத்தூா் மாவட்ட ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலா் வே.நல்லசிவன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இதன்படி மொத்தம் 9,28,853 வாக்காளா்கள் உள்ளனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரைவு பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் கூறியது: வரைவு வாக்காளா் பட்டியல் படி
Advertisement
Advertisement
திருப்பத்தூா் ஆண்கள் 1,13,716 பெண்கள் 1,15,215 மற்றவை 34 மொத்த வாக்காளா்கள் 2,28,965, ஜோலாா்பேட்டை: ஆண்கள் 1,17,788, பெண்கள் 1,20,844, மற்றவை 20, மொத்த வாக்காளா்கள் 2,38,652, வாணியம்பாடி: ஆண்கள் 1,20,690, பெண்கள் 1,,24228 மற்றவை 62 மொத்த வாக்காளா்கள் 2,44,980, ஆம்புா் ஆண்கள் 1,05,151, பெண்கள் 1,11,064, மற்றவை 41, மொத்த வாக்காளா்கள் 2,16,256 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 9,28,853 வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்குச்சாவடி மறுசீரமைப்புப் பணிகள் 2.11.2026-க்குள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடா்ந்து 12.112026 ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நாளான 12.11.2026 முதல் 11.12.2026 வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படும்.
மேலும், நவ. 21, , 22, மற்றும் 29 தேதிகளில் திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள அனைத்து 1,203 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் 28.122026-க்குள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனைத் தொடா்ந்து, இறுதி வாக்காளா் பட்டியல் 4.012027 அன்று வெளியிடப்பட உள்ளது.
கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன்,ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)பாபு,தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி)பூஷண குமாா், வருவாய் கோட்டாட்சியா்கள்(பொ)தணிகாஜலம் (திருப்பத்தூா்),சிவக்குமாா்(வாணியம்பாடி),தனி வட்டாட்சியா் (தோ்தல்)மு.நவநீதம் மற்றும் அனைத்து அங்கிகரிக்கப்ட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.