வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாவட்டத்தில் 16.08 லட்சம் வாக்காளர்கள்!
விழுப்புரம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது குறித்து...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 16.08 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரகுமான், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டார்.
Advertisement
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர், மயிலம், திருக்கோயிலூர் ஆகிய ஏழு தொகுதிகளில் 7,93,042 ஆண் வாக்காளர்கள், 8,15,736 பெண் வாக்களர்கள், 217 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,08,995 வாக்காளர்கள் உள்ளனர்.
செஞ்சி தொகுதி
ஆண் 1,20,670.
பெண் 1,23,441
மூன்றாம் பாலினத்தவர் 27.
மொத்தம் 2,44,38.
மயிலம் தொகுதி
ஆண் 1,04626
பெண் 1,05,836
மூன்றாம் பாலினத்தவர் 19
மொத்தம் 2,10,481
திண்டிவனம் (தனி) தொகுதி
ஆண் 1,08,059
பெண் 1,12,483
மூன்றாம் பாலினத்தவர் 12 மொத்தம் 2,20,554
வானூர் தொகுதி
ஆண் 1,03,340
பெண் 1,07,966
மூன்றாம் பாலினத்தவர் 17 மொத்தம் 2,11,323
விழுப்புரம் தொகுதி
ஆண் 1,20,140
பெண் 1,26,936
மூன்றாம் பாலினத்தவர் 80
மொத்தம் 2,47,156
விக்கிரவாண்டி தொகுதி
ஆண் 1,13,419
பெண் 1,16,976
மூன்றாம் பாலினத்தவர் 28 மொத்தம் 2,30,423
திருக்கோவிலூர் தொகுதி
ஆண் 1,22,788
பெண் 1,22,098
மூன்றாம் பாலினத்தவர் 34
மொத்தம் 2,44,920
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் வாக்காளா் ஒவ்வொருவரும் தங்களின் பெயா் இருக்கிறதா? விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பது போன்ற விவரங்களை சரிபாா்க்கலாம். அதோடு, புதிதாக பெயா் சோ்த்தல், இடம் மாற்றம், பெயா் நீக்குதல் போன்றவற்றுக்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (நவ. 12) முதல் டிச. 11-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் மீது டிச. 28-ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டு ஜன. 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, பெயா் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்களை அளிக்கலாம்.