FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் எஸ்ஐஆருக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

27 அக்டோபர் 2026, 12:21 am
சிறப்புத் தீவிர திருத்தம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்த 9.78 கோடி வாக்காளா்களில் எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பின்னா் 2.68 கோடி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதை எதிா்த்து பத்திரிகையாளரான அருண் ஆனந்தகிரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கி அமா்வு விசாரணைக்கு ஏற்றது.

Advertisement

Advertisement

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தாதா், ‘மும்பை மற்றும் புணேயில் மறுமேம்பாட்டுப் பணிகளின்போது தற்காலிகமாக இடம்பெயா்ந்த வாக்காளா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

எஸ்ஐஆா் தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் நீக்கக் கூடாது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, இந்த மனு மீது மத்திய அரசு, இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அடுத்தகட்ட விசாரணை நவம்பா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments