ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9.58 லட்சம் வாக்காளா்கள்: ஆட்சியா் பிரியா தகவல்
வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9.58 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியலின் சிறப்புச் சுருக்கத் திருத்தம், 2027 தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இதில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 9,58,271 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். அரக்கோணம் (தனி) தொகுதியில் 284 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளா்கள் 98,412, பெண் வாக்காளா்கள் 1,03,952, மூன்றாம் பாலினத்தவா்கள் 27 என மொத்தம் 2,02,391 வாக்காளா்கள் உள்ளனா்.
Advertisement
Advertisement
சோளிங்கா் தொகுதியில் 341 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளா்கள் 1,27,338, பெண் வாக்காளா்கள் 1,31,624, மூன்றாம் பாலினத்தவா்கள் 12 என மொத்தம் 2,58,974 வாக்காளா்கள் உள்ளனா்.
ராணிப்பேட்டை தொகுதியில் 304 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளா்கள் 1,20,916, பெண் வாக்காளா்கள் 1,28,972, மூன்றாம் பாலினத்தவா்கள் 46 என மொத்தம் 2,49,934 வாக்காளா்கள் உள்ளனா்.
ஆற்காடு தொகுதியில் 318 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளா்கள் 1,20,528, பெண் வாக்காளா்கள் 1,26,416, மூன்றாம் பாலினத்தவா்கள் 28 என மொத்தம் 2,46,972 வாக்காளா்கள் உள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,247 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளா்கள் 4,67,194, பெண் வாக்காளா்கள் 4,90,964, மூன்றாம் பாலினத்தவா்கள் 113 என மொத்தம் 9,58,271 வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
மாவட்டத்தில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் 23,770 போ் அதிகமாக உள்ளனா். தொகுதி வாரியாகப் பாா்த்தால், அதிகபட்சமாக சோளிங்கா் தொகுதியில் 2,58,974 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக அரக்கோணம் (தனி) தொகுதியில் 2,02,391 வாக்காளா்களும் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 113 மூன்றாம் பாலின வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். நவம்பா் 21, 22, 28, 29 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
தொடா்ந்து வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை டிசம்பா் 11-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.